தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உணவு கிட்டங்கிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு
தேனி, ஜூலை.11-
தேனி மாவட்டத்தில் இன்று (18.7.2026) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தேனி மண்டல உணவுப்பொருள் கிட்டங்கிகளை மாவட்ட கலெக்டர் மரு இரா.வைத்திநாதன் முன்னிலையில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அவர்கள் தேனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உணவுப்பொருள் இருப்புக் கிட்டங்கியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களை பார்வையிட்டதுடன் அதன் இருப்பு குறித்தப் பதிவேடுகளை ஆய்வு செய்து உணவுப்பொருட்களை இருப்பு வைக்காமல் அவ்வப்போது நியாய விலைக்கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு பராமரிப்பில் உள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் உணவுப்பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் அதை உடனடியாக மாற்றி தரம் உள்ள உணவுப்பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடந்து தேனி நுகர்பொருள் வாணிபக்கழக உணவுக்கிட்டங்கியில் ரூ4.71 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 புதிய உணவுப் பாதுகாப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், வருங்காலங்களில் புதிதாக கட்டக்கூடிய உணவுப்பொருள் இருப்புக் கிட்டங்கிகளில் conver system அமைத்திட வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதன் மூலம் பொருட்களை எளிதாக அடுக்கி வைப்பதற்கு பணியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதன் பின்னர் உப்பார்பட்டி சிப்காட் உணவுப் பூங்கா அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, இதற்கான அடுத்த நடைமுறை பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் காலதாமதமின்றி நெல் மூட்டைகளை அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூரில் நுகர்பொருள் வாணிபக்கழக உணவுக் கிட்டங்கிகளுக்கு சென்று உணவு பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தரமான பொருட்களை சரியான எடையுடன் அனுப்புவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்களை சந்தித்து நாள்தோறும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததுடன், தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் தெரிவித்தார்.
இதற்கிடையே உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது
தேனி மாவட்ட மக்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு இன்றையதினம் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கிகளில் அரிசி, பருப்பு உள்ளிட்டப் பொருட்களின் தரம் மற்றும் பெறப்படும் பொருட்களின் எடை, அவை சரியான எடை அளவுடன் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகக் கிட்டங்கிகளி பள்ளிகள், விடுதிகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பச்சைப் சுண்டர் ள்ளிட்டப் உணவுப்பொருட்களின் தரம் குறித்தும் பொருட்களின் இருப்பு குறித்து பதிவேடுகளில் முறையாக பதியப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, கிட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு, வருங்காலங்களில் தடுப்பு காவல்துறை, வருவாய்த்துறை வனத்துறை வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் வழங்கல் துறைகளை ஒருங்கிணைத்து சோதனைச் சாவடி (check post) அமைக்கப்படும். குறிப்பாக சரியான எடை அளவில் உணவுப்பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை கையாள உள்ளோம். மேலும், நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு கூட்டங்கள் நடத்தப்பட்டு தரமானப் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அளவில் பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தற்போது தற்காலிக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும். எல்நினோ பாதிப்பினை கருத்தில் கொண்டு, திறந்தவெளி கொள்முதல் நிலையங்கள் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்காலிக கொள்முதல் நிலையங்களில் 14,620 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான தண்ணீரை போர்வெல் மூலமாகவும். தண்ணீர் கிடைக்கக்கூடிய பிற இடங்களிலிருந்து பற்றாக்குறையான இடங்களுக்கு பெற்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் மாற்றுப் பயிரை பயிரிடுவதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயந்திரங்கள் மூலம் பயிடுதலை எளிமையாக்கி விவசாயப்பரப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் த.வெ.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார். நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் குணசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, நுகர்பொருள் வாணிபக்கழக கட்டிடப் பிரிவு உதவி பொறியாளர் ஜெயதேவி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் சிவக்குமார். க்ஷாகுல் ஹமீது கண்காணிப்பு அலுவலர் சித்திக் ராஜா உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருத்தனர்.
....................................
K.நாகராஜ், தலைமை நிருபர்
Advertisement :









Comments