Skip to main content

Posts

Showing posts with the label கூட்டம் தேனி செய்தி

எம்ஜிஆர், அம்மா ஆசியோடு தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்: ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் இபிஎஸ்., பேச்சு

தேனி, ஏப்.14- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து 14.4.2026 அன்று பிரசாரம் செய்தனர் பிரசார கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி.  மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநில தொகுதிகளையும் மறுசீரமைப்புக்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்து பேசுகிறார்.   பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லி விட்டனர். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது எங்களை பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டி பார்க்கிறார் இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.   இதனை...