சர்வேயர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து: தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்
தேனி, செப்.22- தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சின்னமனூரில் சர்வேயர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் திருமூர்த்தி, தேனி நகர சர்வேயர் கணேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகர சார் ஆய்வாளராக பணிபுரியும் ஜெகன்குமார் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் அளவை பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குண்டர்களால் தாக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த ச...