தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் (94877 71077) சேவை தொடக்கம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
தேனி, மே.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.05.2026) பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் (9487771077) சேவையை மாவட்ட ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை எளிதாகவும், விரைவாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வராமல், தங்களது கைப்பேசி மூலமாகவே குறைகளை பதிவு செய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் (9487771077) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கழிவுநீர் வடிகால், சுகாதாரம், வருவாய் தொடர்பான பிரச்சினைகள், பொது விநியோக திட்டம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோக்கள் வடிவில் அனுப்பலாம். பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி ...