Skip to main content

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.15-

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் செயல்பட்டு வரும் தோழி விடுதியையும் பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள அரசு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளான சாலை வசதி, கூடுதல் தெருவிளக்குகள் அமைத்தல், பேருந்து நிறுத்தம் ஏற்படுத்துதல் மற்றும் கூடுதல் பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததுடன், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மரு. இரா.வைத்திநாதன் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர்  மிதுன்சக்கரவர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
..................................
K.நாகராஜ், தலைமை நிருபர் 

Advertisement :





Comments