Skip to main content

மதுரை-திருநகர், சொர்ணம் காலனி பகுதியில் குண்டும் குழியுமான புழுதி சாலையால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, மார்ச்.13-

மதுரை மாநகராட்சி, திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடபடாததால் அப்பகுதி புழுதி களமாக காட்சியளிப்பதுடன் குண்டும், குழியுமான சாலையாக அப்பகுதி மாறிவிட்டது. 
இதனால் அப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. இதில் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் கூட ஏற்பட்டு விடுகிறது. 
எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை சீரான முறையில் மூடி சாலைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
.............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments