Skip to main content

தேனியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம்

தேனி, பிப்.4-

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் தேனி மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் தேனி நேரு சிலை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வழங்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வருவாய், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களுக்கு  குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும்.

70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு  கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments