Skip to main content

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: தேனியில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்

தேனி, பிப்.9-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.2.20206) திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளகளுக்கு முதலமைச்சரின் உணவுத்திட்டம் விரிவாக்கத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி வசந்த மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத்திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் கலந்துகொண்டு தாய்மை பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறி தொடங்கி வைத்தார்.

அதுபோல போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்கள், சின்னமனூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் அவர்கள், ஆண்டிபட்டி பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆமகாராஜன் அவர்கள். பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் அவர்கள் மற்றும் இதர நகராட்சிகள் அனைத்து பேரூராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிதிதிகள் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் வாழ்க்கையையும். வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தூய்மைப் பணியாளர்களி நலனுக்காக பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவது தாரம் அந்தவகையில் ஒரு நகரம். ஒரு கிராமம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதற்கான அடித்தளம் தூய்மை பணியாளர்களே மழை வெயில் பண்டிகை விடுமுறை எந்த நாளாக இருந்தாலும் சமூகத்தின் நலனுக்காக பனியாற்றும் தூய்மை பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான் தூய்மைப் பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது

தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திருமண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது தாட்கோ மூலமாக தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார காப்பீடு பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசி முகாம்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைப்பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களின் உடல்நலம். உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் நோக்கில் அரசு அறிமுகப்படுத்திய மனிதநேய திட்டமே தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டமாகும். இந்த திட்டம் சமூக நீதியின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம் கடந்த 15.11.2025 அன்று சென்னை மாநகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் உணவுத்திட்டன் விரிவாக்கம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின்படி தூய்மை பணியாளர்களுக்கு சுவையும். ஆரோக்கியமும் நிறைந்த உணவு தினந்தோறும் வழங்கப்படும். இதன்மூலம் தூய்மை பணியாளர்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும் மற்றும் சோர்வின்றி பணியாற்றும் சூழலை உருவாகும்.

அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் 22 பேரூராட்சிகளில் பணி தூய்மை பணியாளர்களுக்கு இன்று முதல் முதலமைச்சரின் உணவுத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்க திட்டத்தில் இட்லி வடை சம்பார். திங்கட்கிழமை, செவ்வாய்கிழமை ரவா கிச்சடி சட்னி, புதன்கிழமை வெண்பொங்கல் சாம்பார், வியாழக்கழமை, உப்புமா புதினா கொத்தமல்லி சட்னி, வெள்ளிக்கிழமை இட்லி வடை சாம்பார் சனிக்கிழமை ரவா பொங்கல் சாம்பார்,. ஞாயிற்றுக்கிழமை சேமியா கிச்சடி சாம்பார் ஆகிய உணவுகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளர் கவுன்சிலர் சூர்யா பாலமுருகன், பழளிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி நகராட்சி ஆணையாளர் பார்கவி, நகராட்சி பொறியாளர் குணசேகரன், வருவாய் அலுவலர் முனிராஜ், சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments