Skip to main content

தேனியில் என் ஊர் என் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி. 2030-ஐ மையப்பொருளாக கொண்டு மாவட்ட அளவிலான கருத்தரங்கம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது

தேனி,ஜன.6-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (6.22026) eraன் ஊர் erன் கனவு திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி 2030.ஐ மையப்பொருளாக கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்களைக் கொண்ட தனிநபர்கள் மக்கள் பிரதிநிதிகள் இளம் தலைவர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள். வணிகர்கள், சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோரிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கேட்டறிந்து இலக்கு-2030 உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் வாழ்க்கையையும். வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக என் ஊர் என் கனவு என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஒரு மாவட்டத்தின் உண்மையான வளர்ச்சி என்பது தற்போதைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதில் அல்ல எதிர்காலத் தலைமுறைகளின் நலனை திட்டமிடும் தொலைநோக்கு பார்வையில் உள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையே மாவட்டத்தின் நிலையான சமநிலை மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அடித்தளம் ஆகும்.

மக்கள்தொகை உயர் காலநிலை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு. நீண்டகால திட்டங்களை உருவாக்கி தேனி மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியினை மையாக கொண்டு மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் வணிகர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனத்தாரிடமிருந்து பெறப்பட்ட ஆக்கப்பூர்வமான கருத்து அனைத்தையும் தொகுத்து செயல்திட்டமாக தயார் செய்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.
அதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விவசாயம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், மதிப்புக்கூட்டு தொழில்கள் ஆகியவற்றை வலுப்படுத்துதல், கல்வி வளர்ச்சி வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு. பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளித்தல், சுயதொழில் வாய்ப்புகளை விரிவாக்குதல், சுகாதார வசதிகள், நீர் வள பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, கழிவு மேலாண்மை. பசுமை பரப்பளவு அதிகரித்தல், போக்குவரத்து வசதியினை மேம்படுத்துதல், பெண்கள், குழந்தைகள் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய சமூகங்களின் மேம்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் இளம்ஷதலைவர்கள், துறைசார்ந்த வல்லுநர்கள். உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் வணிகர்கள் சங்கப்பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள். சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்டறிப்பட்டது.

பின்னர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் தொலைநோக்கு தேனி 2030 செயல்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த கருத்தரங்கு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது. உள்ளிட்சி பிரதிநிதிகள்  மற்றும் அனைத்துத்துறை மாவட்ட நிலையிலான அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.......................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments