தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500 சிலைகள் வைத்து வழிபாடு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தேனி, ஜூலை.27-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் 10-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் தேனி வசந்த மஹாலில் 27.7.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் மாய லோகநாதன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி கலந்து கொண்டு இந்து எழுச்சி முன்னணி இயக்கம் தொடங்கப்பட்ட விதம், கடந்து வந்த பாதைகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் விழாவில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி நன்றி கூறினார்.
.........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments