தேனியில் தனிஷ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பழைய தங்கத்திற்கு 2 காரட் கூடுதல் மதிப்பு பெறும் மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம் : ஜூன் 30 வரை நடக்கிறது
தேனி, ஜூன்.16-
தேனியில் உள்ள தனிஷ்க் தங்க நகை ஷோரூம் கிளையின் நிர்வாக இயக்குனர்கள் ரமண மூர்த்தி, கதிரேசன் மற்றும் மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்ற சலுகையை [Gold Exchange offer] அறிவித்துள்ளது.
இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது 2 காரட் வரை கூடுதல் மதிப்பு" (up to 2 Karat extra valur) பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இச் சலுகை ஜூன் 30.2025 வரை மட்டுமே வழங்கப்படும் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெறும் வாய்ப்பளிக்கிறது:
தங்க நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 1 காரட் கூடுதலாக பெறுங்கள். [1KT extra on old gold
வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 2 காரட் கூடுதலாக பெறுங்கள். (2KT extra on old gold] உதாரணத்திற்கு, நீங்கள் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட புதிய நகைகளை வாங்கும் போது 20KT, 21KT ஆகவும் வைர பதிக்கப்பட்ட புதிய நகைகளை வாங்கும் போது 20KT, 22KT ஆகவும் கூடுதல் மதிப்புடன் வாங்க முடியும். நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய தங்கத்தின் ஒவ்வொரு காரட்டிற்கும் அதிக மதிப்பை இச்சலுகை வழங்குகிறது.
இந்த சலுகை தனிஷ்க் அல்லாத நகைக்கடைக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்ட பழைய தங்கத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
.........................
நாகராஜ், செய்தி ஆசிரியர்
Comments