Skip to main content

தேனியில் இந்து வியாபாரிகள் நல சங்கத்தினருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

தேனி, மார்ச்.19-

இந்து முன்னணி பேரியக்கத்தின் தேனி வடக்கு மாவட்டத்தின் சார்பு அமைப்பான இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா 19.3.2025 அன்று தேனி வாசவி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு பாண்டியன் பட்டாசு கடை நிர்வாக இயக்குனர் குமரேசன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். 
விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.
விழாவில் தேனி நகர பா.ஜ.க தலைவர் ரவிக்குமார், பா.ஜ.க வர்த்தக அணி பிரிவு நிர்வாகி ஜெயராமன் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் போது 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். 

நாகராஜ், தலைமை நிருபர் 


............................

Comments