தேனி-க.விலக்கு அருகே: சங்கர் நகர் வீட்டு மனை விற்பனை துவக்க விழா; நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர்
தேனி, டிச.22–
தேனி மாவட்டம், க.விலக்கில் இருந்து கண்டமனூர் செல்லும் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி எதிரில் அமைந்துள்ள சங்கர் நகர் வீட்டு மனை விற்பனை துவக்க விழா 21.12.2025 அன்று நடைபெற்றது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சிக்கு வினோரா பவுண்டேஷன் நிறுவன தலைவர் வி.ஆர். ராஜன் தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மேலாளர் குமார் வரவேற்றார்.
வீட்டு மனை விற்பனை துவக்கத்தை பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் வீட்டு மனை பிளாட்கள் வாங்கியவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்கமளித்தனர்.
இந்த சங்கர் நகரில் வீட்டுமனைகள் அகலமான சாலை வசதி, சிறந்த குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதியுடன் அமைந்துள்ளன. இங்கு 3 சென்ட் மற்றும் 6 சென்ட் வீட்டு மனை பிரிவுகள் உள்ளன. இங்குள்ள வீட்டு மனைகள் DTCP அங்கீகாரம் பெற்றதும், RERA ஒப்புதல் பெற்ற பிளாட்களாகவும் உள்ளன.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் தேனி மேலப்பேடடை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜமோகன், வைகை அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். கணேஷ், ராயல் அரிமா சங்கத்தின் பட்டய தலைவர் செல்வநாயகம், தேனி பிசினஸ் ஃபோரம் நிறுவன இயக்குனர் செந்தில், குரூஸ் நிறுவன இயக்குனர் தண்டபாணி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சந்தான கிருஷ்ணன், ஆக்சிஸ் வங்கி மேலாளர் ராஜீவ் காந்தி, திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பாண்டியராஜன், பொறியாளர் முகமது ஜாபர், அரிமா சங்க உறுப்பினர் மாணிக்கம், அரிமா சங்க தேனி–திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், அரிமா சங்க முன்னாள் வட்டாரத் தலைவர் கண்ணன், மருத்துவ பொறியாளர் ராஜேஷ் கண்ணா, சில்வர் ஜூப்ளி அரிமா சங்க பட்டயத் தலைவர் லால் சீனிவாசன், பொறியாளர் சௌந்தரம், லட்சுமிபுரம் சுந்தர், விஜயகுமார் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ், சில்வர் ஜூப்ளி அரிமா சங்கத்தின் தலைவர் எல்ஐசி நாகராஜ், பெரியகுளம் அரசு வழக்கறிஞர் ஆரிப்கான் வழக்கறிஞர் குமரன், ரத்தினம் நகர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், செய்தி ஆசிரியர்

Comments