Skip to main content

தேனியில் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரிசி இலவசமாக தரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்

தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சார்பில் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாய காப்போம் என்ற தலைப்பில் விவசாயம் குறித்த புகைப்படங்கள் கொண்ட பேனர் போட்டாவை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் வைக்க வேண்டும். அந்த ஸ்டேட்ஸ்சை 100 பேர்கள் பார்த்தால் 1 கிலோ அன்னை ராஜபோகம் அரிசி இலவசமாக பெற்று கொள்ளலாம் என தேனி கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு சில நிபந்தனைகளை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. ஸ்டேட்டஸ் வைத்த போனை நேரில் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் (screen shot) அனுமதி இல்லை.

2. ஒரு நம்பருக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி.

3. இந்த சலுகை மே 10-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரை

4. நிபந்தனைகளுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ் 


Comments