Skip to main content

தேனியில் ஆலோசனை கூட்டம்: தென்னையில் வேர் ஊட்டம் குறித்து தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

தேனி, ஏப்.10-

தேனியில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தேனி தெய்வா ஹோட்டலில் 9.4.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கவிதாலயா சரவணன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பிரபு ராஜா, தேசிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் தென்னை சாகுபடியில் உள்ள இடர்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் தென்னை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மதுமிதா, மதுஹரினி, மோகன ஸ்ரீ, மோனிஷ் பிரியா, நவீனா, நவினா மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் வேர் ஊட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.

இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை 5.5 சதவீதத்திலிருந்து 27.5 சதவீதமாக உயர்த்தி கொடுத்தற்தாக மத்திய அரசுக்கு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தென்னை விவசாயத்தை காக்கும் பொருட்டு மத்திய அரசு பாரத் எண்ணெய் என்ற வணிக அடையாளத்துடன் இந்தியா முழுமைக்கும் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசு ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெய்யை ரேசன் அட்டைகளுக்கு மாதத்திற்கு ஒரு லிட்டர் என்ற விதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் உள்நாட்டு தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் ஆரோக்கியம் காக்கப்படும். 
அதுபோல ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் மாதத்திற்கு 5 கிலோ தேங்காய் என்ற விதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் குறைந்த விலையில் தேங்காய் பெற முடியும்.
மரம் ஏறும் தொழிலாளர்களின் குடும்ப நலன் கருதியும், தென்னை விவசாயிகளின் குடும்ப நல கருதியும், மது பிரியர்களின் ஆரோக்கியம் கருதியும் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கான தடையை முற்றிலும் நீக்க வேண்டும். 
தமிழகத்தின் அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் தேங்காய் கொள்முதல் நிலையங்கள் திறந்து தேங்காய்யை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
................................
நாகராஜ், தலைமை நிருபர் 



Comments