தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் டாக்டர்.கதிர்காமு, அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் வி.டி. நாராயணசாமி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் லோகிராஜன், கம்பம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.கே ஜக்கையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில் 31.3.2026 அன்று நடைபெற்றது.
இந்த அறிமுக கூட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன் மற்றும் பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், பி.சி.பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் போது ஒவ்வொரு தொகுதி வாரியாக பாஜக நிர்வாகிகளுக்கு அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது பாஜக நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கும், வேட்பாளர்கள் பாஜக நிர்வாகிகளுக்கும் பொன்னாடைகள் அணிவித்து கொண்டனர்.
இந்த அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கதிர்காமு, போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் V.T. நாராயணசாமி, ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜன் மற்றும் பா.ஜ.க ஊடக பிரிவு பொறுப்பாளர்கள் முத்துப்பாண்டி, சரவணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர்







Comments