Skip to main content

போடி தொகுதியில்; மகளிர் சங்கங்கள், சர்ச் நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்த தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ்.,


தேனி, ஏப்.13-

தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 


இந்நிலையில் போடி சிசம் ஸ்கூல் அருகில் உள்ள சர்ச்சில் சம்மந்தப்பட்ட சர்ச் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டார். அதன் பின் 2026 தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தன்னை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தங்களது பேராதரவு தருமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.
இதனைத்தொடர்ந்து போடி பகுதியில் உள்ள (ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில்) பிரமலை கள்ளர் சங்கங்கள் தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் (ஸ்ரீ உச்ச காளியம்மன் திருக்கோவில்) கிழக்கு மறவர் மகாஜன  சங்கங்கள் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டார். அதன் பின் போடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தன்னை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆதரவு கோரி வாக்குகள் சேகரித்தார்.
இதனை அடுத்து தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் மகளிர் முன்னேற்ற சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர்,  போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து போடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தன்னை உதயசூரியன் சின்னத்தில் பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய பேராதரவு தருமாறு கேட்டு ஆதரவு கோரினார். அப்போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி., தேனி திமுக வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், முன்னாள் எம்எல்ஏ., போடி லட்சுமணன் உள்பட தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மகளிர் சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்கவுண்டன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசை தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர், தமிழக முதல்வர் முக.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்று தமிழக முன்னாள் முதல்வர் திமுக வேட்பாளர் ஓபிஎஸ் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி., ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து போடி  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடாங்கிபட்டி, மாரியம்மன் கோவில்பட்டி, முத்துதேவன்பட்டி, சத்திரப்பட்டி, வீரபாண்டி, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய  பகுதிகளில் திறந்த வேனில் திமுக வேட்பாளர் ஓபிஎஸ் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வாக்கு சேகருக்கு சென்ற வேட்பாளருக்கு வெற்றியின் சின்னமாக விளங்கும் வேல் கொடுத்து , ஆள் உயர மாலை, ஏலக்காய் மாலை அணிவித்து மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 
இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் எம்பி., ரவீந்திரநாத், தேனி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி, வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments