பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டாக்டர்.கதிர்காமு வேட்புமனு தாக்கல்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் அமமுக-வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அதிமுக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று 4.4.2026 அன்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஜத்பீடன் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி அமமுக மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி, தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அமமுக செயலாளர் குரு கணேஷ், தேனி நகர பாஜக தலைவர் ரவிக்குமார் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments