தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் 8 நாள் சித்திரை திருவிழா : பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குலாலர் சமுதாயம் சார்பில் மண்டகப்படி
தேனி, மே.19-
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. 8 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த எந்திர ராட்டினங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை கண்டுகளித்தனர்
அதுபோல அம்மனுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி, மாவிளக்கு சேத்தாண்டி வேஷம், கிடா வெட்டுதல் போன்ற நேர்த்தி கடனை இரவு பகலாக நிறைவேற்றினர்.
இந்த திருவிழாவின்போது முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 15-ந் தேதி நடைபெற்றது. அப்போது தேர் நிலையில் இருந்து கோவில் முன்பு வரை இழுக்கப்பட்டது. இதன் பின்னர் தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி என தேர் என ஒவ்வொரு நாளும் இழுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தேர் மேற்கு ரத வீதியில் நிற்க வைக்கப்பட்டிந்து. அப்போது வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது.. இந்த மண்டகபடி நிகழ்வில் பேரூராட்சி தலைவர் கீதா சசி, செயல் அலுவலர் இளங்கோவன், இளநிலை உதவியாளர் வாசிமலை,, துணைத்தலைவர் சாந்தகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரத்தின சபாபதி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் உள்பட கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பேரூராட்சி தலைவர் உள்பட அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது.
இதேபோன்று வீரபாண்டி போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் தலைமையிலும், தேனி மாவட்ட குலாலர் சமுதாயத்தின் சார்பில் சமுதாய தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகி ராமர் மற்றும் சமுதாய நிர்வாகிகள் முன்னிலையில் மண்டகப்படி நடைபெற்றது. அப்போது குலாலர் சமுதாய நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திருவிழாவிற்காக கோவிலை சுற்றி இழுத்து வரப்பட்ட தேர் நிலைக்கு வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்காக கோவில் வளாகத்தில் ஊன்றப்பட்ட முக்கம்பம் திருவிழா நிறைவு பெறுவதற்கு அடையாளமாக நேற்று இரவு அகற்றப்பட்டது. ............................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments