பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணர்வு திட்டம் தொடர்பான கருத்தரங்கம் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் நடந்தது
தேனி, ஜூலை.13-
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் (Awarenes Programme on Gender Sensitisation and Elimination of Violence Against Womens விழிப்புணர்வு திட்டம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் 12.7.2025 அன்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.என். மஞ்சுளா, எஸ் ஸ்ரீமதி, எம் ஜோதிராமன், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பாலின பாகுபாடு பெண்களின் கல்வி பற்றிய அலட்சியம் திருமணத்தில் கட்டாயம் குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகள் அதிகம் உள்ள காரணத்தினால், பொதுமக்களுக்கு சமூகப் பிரச்சனைகள் குறித்துத் தெளிவான தகவல்களை வழங்கி அவர்களது எண்ணங்கள் மற்றும் நடத்தை முறைகளை மாற்றத்தை ஏற்படுத்தவும். பெண்கள் மீதான எந்தவொரு வகையான வன்முறையையும் மெய்யியல் உளவியல். சொற்சாடல் பொருளாதார அடிப்படை குறைக்கவும். பாலின சமத்துவம் (Gender Equality) என்ற ஆழ்ந்த கருத்தை சமூகத்தில் வேரூன்ற செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்விழிப்புணர்வுத் திட்டம் நடத்தப்படுகிறது.
பாலின என்பது ஒவ்வொருவரும் பெண்கள் ஆண்கள் திருநங்கைகள் என அனைவரும் சம உரிமையுடன் சமூகத்தில் வாழ வேண்டும் என்ற நியாயமான கருத்தை எடுத்துரைக்கும் முனைப்பாகும் சமூகத்தில் பரவலாக காணப்படும் பாலின பாகுபாடு பாரம்பரிய கட்டுப்பாடுகள். பெண்களின் எதிர்நோக்கும் தடைகள் ஆகியவற்றை விமர்சித்து மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியாகும்.
பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் குழுக்கள் மற்றும் கிராமங்களில் பேசும் கூட்டங்கள் நடத்துதல் காவல்துறை. நீதித்துறை சமூக அமைப்புகள் இணைந்து செயற்படுதல் பொது மக்களுக்கான விளக்க காட்சி, வீடியோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சட்ட உதவிகள் மற்றும் ஆதரவு பணிகள் பற்றிய விளக்கங்கள் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுவதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளான 1.உடல் வன்முறை (அடித்தல் தாக்குதல் போன்றவை) 2.உளவியல் வன்முறை ( அச்சுறுத்தல் இழிவுபடுத்தல்) 3.பாலியல் வன்முறை (விருப்பமின்றி தொடுதல், பாலியல் தொழில் தொடர்பான வற்புறுத்தல்கள்) 4 பொருளாதார வன்முறை (சம்பளத்தை வழங்காமை, சொத்துக்களில் உரிமை மறுப்பு சொல்லால் வன்முறை நசுக்கும் வார்த்தைகள் அழிவுபடுத்தும் கூற்றுகள்) போன்ற வன்முறைகளிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாக்க கொள்ள தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திட முடியும்.
இக்கருத்தரங்கில் பெண்கல்வி மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு, சிறுவர் சிறுமிகளின் மீதான பாலின வன்முறை தாக்குதலிருந்து பாதுகாத்தல் பெண்களின் முன்னேற்றம், சமூக பங்களிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதுபோன்ற விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை மேம்படுத்தி கொள்வதுடன் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும்.
இந்நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி. தலைமை குற்றவியல் நீதிபதி என்.சரவணக்குமார் (தேனி), பேராசிரியர்கள் என்.முருகேஸ்வரி (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), ஜி. உமா (பாலின மேம்பாட்டு ஆய்வு பள்ளி புதுடெல்லி), உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் (மதுரை கிளை) அருணா கணேஷ் ரோஷன் ராஜன், மற்றும் வழக்கறிஞர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments