Skip to main content

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா: தேனி எம்.பி., TTS வழங்கினார்.

தேனி, செப்.21-

தேனி மாவட்ட உலக அமைதி குழு சார்பில் உலக அமைதி தின விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கி கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். 

உலக அமைதி குழு பொதுச்செயலாளர் ஜெயபால், தேனி மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக அமைதி குழு இயக்குனர் பால்பாண்டி வரவேற்றார். 

விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
விழாவில் தொழிலதிபர் சந்திரகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உதவி திட்ட அலுவலர் மோகன், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சோல்ஜர் அகாடமி இயக்குனர் சின்னச்சாமி, வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணி கார்த்திக், பெரியகுளம் நகர் நலச் சங்கம் அன்புக்கரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது 70 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
முன்னதாக உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தியும், போரை நிறுத்த கோரியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் உலக அமைதி குழு நிர்வாகிகள், வணிகர் சங்க நிர்வாகிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பேரணி தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி பங்களா மேடு வழியாக தேனி பழைய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 



Comments