தேனி, ஜூலை.8-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கனரா வங்கியின் 120-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு தேனி கனரா வங்கி மற்றும் கல்லூரியின் பசுமை சூழல் செல் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் உபதலைவர் A.S.ஜீவகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர டாக்டர்.C.மதளைசுந்தரம் வரவேற்றார்.
விழாவில் தேனி மாவட்ட கனரா வங்கியின் துனை பொதுமேலாளர் இந்திரயா, உதவி பொது மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு 200 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். மேலும் உலகளவில் மாறி வரும் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்க மரங்கள் உதவுவதை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் சிவகுண்டலம், வில்வம், இழுப்பை, நாகலிங்கம், மருதம், சரக்கொன்றை போன்ற பழைமையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். மேலும் தேனி கனரா வங்கியின் மேலாளர் அபிஜித், மற்றும் கனரா வங்கியின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர்.N.மாதவன், டாக்டர்.M.சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர். C.கார்த்திகேயன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் R.பிரதீப்குமார், கல்லூரியின் பசுமை சூழல் செல் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் நாகரத்தினம். உடற்கல்வி இயக்குநர் R.சுந்தராஜன், மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
...............................
நாகராஜ், செய்தி ஆசிரியர்
Comments