நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில்: எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம்
தேனி, ஆக.5-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரியின் இணைச்செயலாளர் T.சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையின் பேராசிரியர் டாக்டர்.T.வெனிஸ்குமார் வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம் கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை. வழங்கினார்.
இந்த கருத்தரங்கத்தில் ஓசூர் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடெக்ட் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் டாக்டர்.T.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும், இத்தொழில்நுட்பம் தொடர்பான மென்பொருள் அப்ளிகேசன், எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்டையாக கொண்ட இன்டஸ்டிரியல் ஆட்டோமேசன் ஆகியவற்றை பற்றி விளக்கினார்.
மேலும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் செமிகன்டக்டர் தொழில்நுட்பம் தொடர்பான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறதென்றும், பொறியியல் துறை மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக இல்லாமல் தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களாக செயல்பட வேண்டுமென்று சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு எம்பட்ட் தொழில்நுட்பம் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் பயன்பாடு பற்றி அறிந்து பயனடைந்தனர். மேலும் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடெக்ட் பன்னாட்டு நிறுவனத்துடன் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்துறை பயிற்சி. மாணவர்களின் வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கருத்தரங்கத்தில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன் பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர்.N.மாதவன். டாக்டர்.M.சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர்.C.கார்த்திகேயன், மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் P.கௌதமி நன்றி கூறினார்.
.........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments