தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 132 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.39 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
தேனி, நவ.14-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 14.11.2025 அன்று பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 132 மாணவ மாணவியர்களுக்கு ரூ20 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணணக்குமார் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய காலகட்டத்தில் கல்வி மிகமிக முக்கியமானதாக உள்ளது படிப்பில் தொடர்ச்சியாக முழு கவனம் செலுத்தினால் மட்டுமே உயர்ந்த நிலைய அடைய முடியும். பள்ளிகளில் மாணவர்களின் எழுத்தறிவு விகிதத்தை விட மாணவிகளின் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மாணவிகளின் எழுத்தறிவு விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது
இந்திய அளவில் கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது கல்வி சார்ந்து எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள் பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களும் முழு அர்ப்பணிப்புடன் கல்வி பயில வேண்டும்.மாணவர்கள் நாட்டின் எதிர்காலம். அறிவுரைகளை ஏற்று மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். மேலும் அதிக கவனத்துடன் படிக்க வேண்டும். நாம் படிக்கும் ஒவ்வொரு பாடமும் நமது வாழ்க்கைக்கு சிறந்த அனுபவமாக அமையும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் தான் எந்த துறையில் பணியாற்ற வேண்டும் என்று ஒரு இலக்கு இருக்கும் உங்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்து ஆர்வமுடன் படிக்க வேண்டும். அனைத்து மாணவர்களிடமும் திறமைகள் உள்ளது. அதனை வெளி கொணர்ந்து எதிர்காலத்தில் வெற்றி பெற்றவர்களாக உருவாகி தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். தற்பொழுது இணைய பயன்பாடு (Internet) அதிகரித்துள்ளது. தமிழ்நாடு துணை முதல்வர் அவர்கள் கூறியதுபோல் வீடியோக்கள் மூலம் பாடங்கள் கற்றுத்தரப்படுவதால் மாணவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்வதற்காக மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும்.
தற்பொழுது மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படுவது. பயண நேரம் குறைக்கப்படுவது மட்டுமின்றி சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற் பயிற்சியாகும் மேலும் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்வதால் பாடங்களை கவனமுடன் கற்கலாம். இதுபோன்று அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்தி முழுயைாாக புரிந்து படிக்க வேண்டும். மாணவர்களை நல்ல முறையில் வழிடத்தி செல்லும் ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கலெக்டர் பேசினார்.
தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் 11-ஆம் வகுப்பு படிக்கும் 4024 மாணவர்களுக்கும், 5012 மாணவியர்களுக்கும் மொத்தம் 9036 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.35 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதில் மாணவர்ளுக்கு வழங்கப்படும் ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4900, மாணவியர்களுக்கு வழங்கப்படும் ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4760 ஆகும்.
இன்று முதற்கட்டமாக தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 81 மாணவர்களுக்கும், 51 மாணவியர்களுக்கும் மொத்தம் 132 மாணவர்களுக்கு ரூ6.39 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளர் கவுன்சிலர் சூர்யா பாலமுருகன், தேனி-அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வம், தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments