Skip to main content

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி: காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு சார்பில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.15-

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை உள்பட 15 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். 

இந்த கோரிக்கை மனுவுடன் ரேசன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், ஜாதி சான்று நகல் இணைத்துள்ளோம். எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வீடு இல்லாத எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 







Comments