தேனி, நவ.28-
தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா 27.11.2025 அன்று கேக் வெட்டி, காப்பக குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தேனி திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜன் வரவேற்றார். போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நிஷாந்த், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாசித் ரஹ்மான், கண்ணன், முகமது ரபீக், ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் ஸ்டாலின், காப்பக நிர்வாகி பால்பாண்டி உள்பட பலர் கலந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அயலக அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
........................
நாகராஜ், செய்தி ஆசிரியர்




Comments