Skip to main content

தேனியில் வாசவி கிளப் மண்டல மாநாடு

 

தேனி, செப்.8-

தேனியில் வாசவி கிளப் மண்டல மாநாடு ரம்யாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் மண்டல தலைவர் ராஜா தலைமையில், மண்டல செயலாளர் பாலமுருகன், வட்டார செயலாளர்கள் வெங்கடேஷ் மற்றும் பிரதா சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வாசவி கிளப் இன்டர்நேஷனல் முதன்மை நிர்வாக துணைத்தலைவர் பலராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இன்டர்நேஷனல் வாசவி கிளப் தலைவர் ரவிச்சந்திரன், இன்டர்நேஷனல் வாசவி கிளப் துணைச்செயலாளர் லால் பகதூர் சாஸ்திரி, இன்டர்நேஷனல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், சுரேஷ், துணை கவர்னர் சதீஷ், மாவட்ட அலுவலர்கள் விஜி மோகன் சேகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி, மாவட்ட துணை மக்கள் தொடர்பு அலுவலர் சுவாதி ஸ்ரீ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பொறியாளர் ராதாகிருஷ்ணன், கல்வியாளர்  ராஜமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தனர். இந்த மாநாட்டினை வாசவி கிளப் ஆண்டிபட்டி மற்றும் வாசவி கிளப் தேனி நிர்வாகிகள் நடத்தினர்.

மேலும் இந்த மாநாட்டில் வாசவி கிளப் ராயல் கப்பில்ஸ், பெரியகுளம் வாசவி கிளப், வனிதா தேனி வாசவி கிளப், பழனி வாசவி கிளப், எலைட் ராம்நாடு வாசவி கிளப், மதுரை வாசவி கிளப் வனிதா மதுரை உள்ளிட்ட 8 கிளப்கள் தற்போதைய குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மை தீமைகள், வாசவி கிளப் நிறுவனர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்கள் குறித்தும் மக்கள் ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்த வேண்டும் என்றும், தற்போதைய Al டெக்னாலஜி மூலம் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இந்த மாநாட்டினை இன்டர்நேஷனல் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்தர் முழுவதுமாக கண்காணிப்பு அலுவலராக கலந்து கொண்டு செயல்பட்டார். முடிவில் மண்டல செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
...............................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 


Comments