தேனி, ஆக.10-
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தேனி மாவட்ட மாநாடு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 9.8.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் பெத்தாட்சி ஆசாத், மாவட்ட செயலாளர் முல்லை முருகன், மாவட்ட பொருளாளர் கோவர்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் நூர் முகமது வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் ராஜரத்தினம், மாநில துணை பொதுச்செயலாளர் இந்திரஜித், துணை தலைவர் அழகிரிசாமி, தேசிய குழு உறுப்பினர் தமிழ் மது ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், வினோரா லா அசோசியேட்ஸ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது ஆசிரியர் நற்பணியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயராஜ், வக்கீல் பாண்டி மணி, செஸ் பயிற்சியாளர் வாசிமலை, கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை பாராட்டி மெடல் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மாநாடு விழா நிகழ்ச்சியினை வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம் தொகுத்து வழங்கினார் முடிவில் நல்லாசிரியர் ஜெயராஜ் நன்றி கூறினார்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments