தேனி எல். எஸ். மில் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாம்: 181 பேருக்கு செயற்கை கை, கால் மற்றும் சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
சென்னையில் உள்ள பிரீடம் டிரஸ்ட், ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவனம் மற்றும் தேனி எல். எஸ். மில் சார்பில் குழந்தைகள் உட்பட 181 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உபகரணங்கள் வழங்கும் முகாம் வீரபாண்டியில் உள்ள தேனி எல். எஸ். மில் கலையரங்கில் 12.9.2025 அன்று நடைபெற்றது.
முகாமிற்கு எல்.எஸ். மில் சேர்மன் எஸ். மணிவண்ணன் தலைமை தாங்கினார். எல்.எஸ்.மில் மனித வளத்துறை துணை பொது மேலாளர் நிவாஸ் வரவேற்றார்.
ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவன நிர்வாகிகள் லோக பிரம்மன், ராஜீவ் பிரசாத் மற்றும் மைதிலி பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரீடம் டிரஸ்ட் உறுப்பினர் சங்கரன் அன்னா சுவாமி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற திட்டங்கள் மற்றும் கருவிகள் குறித்து விளக்கினார். தொழில் அதிபர் கெளமாரி சுதாகரன் வாழ்த்தி பேசினார்.
முகாமில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 181 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், செயற்கை கை, கால்கள், சிறு குழந்தைகளுக்கான அதிநவீன இருக்கைகள், சிறப்பு நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தி பேசினார்.
முகாமில் தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம், தொழில் அதிபர்கள் பாலசங்கா செந்தில், டெர்ரி, எல்.எம்.சி. துணிக்கடை அதிபர் அர்ஜுன், பிசியோதெரபி டாக்டர் கார்த்திக் , எல்.எஸ். மில் சிறப்பு செயலாளர் கோபாலன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2 நாட்கள் நடைபெற்ற முகாமில் 476 நபர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. முடிவில் பிரீடம் டிரஸ்ட் போர்டு உறுப்பினர் பிரசாத் நன்றி கூறினார்.
.........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments