Skip to main content

குரும்பாகவுண்டர் இன மக்களுக்கு வருகின்ற தேர்தல்களில் MLA., MP., சீட் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவு: தேனி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

தேனி, டிச.7-

தேனி மாவட்ட குரும்பாகவுண்டர் இன மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கிருஷ்ண பக்தர் கனகதாசரின் 525-வது ஜெயந்தி விழா தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 7.12.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு டான்பெட் முன்னாள் மாநில தலைவர் எல்லப்பட்டி முருகன் தலைமை தாங்கினார். தர்மா பவுண்டேஷன் இயக்குனர் ரவி முன்னிலை வகித்தார். ஆடு வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் வனக்குழு முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் அகில இந்திய பழங்குடியினர் நிறுவன தலைவர் வக்கீல் விஜயன் பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு குரும்பர் பழங்குடி முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் உதகை செங்குட்டுவன், ராசிங்காபுரம் அழகர்ராஜா, அரசு ஒப்பந்ததாரர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன், மகளிர் குழுவை சேர்ந்த ராம்ஜி ஸ்ரீ ஆனந்த சாய் அன்னதான சேவை இயக்குனர் விஜயலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி செல்வம் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
தேனி மாவட்டத்தில் குரும்பா கவுண்டர் இன மக்கள் சமுதாயம் சார்பில் வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் அருகில் திருமணம் மண்டபம் கட்ட வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள 62 கிராம குரும்பா சமுதாய மக்களின் ஆதரவுடன் சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். 
குரும்பா கவுண்டர் சமுதாயத்திற்கு அரசியலில் முழு உரிமை பெறுதல் வேண்டும். தேனி மாவட்டத்தில் கம்பளி நெசவு கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்த வேண்டும்.
குரும்பா கவுண்டர் இன மக்களுக்கு வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் மண்டகபடிதாரருக்கான முன்னுரிமை பெறுதல் வேண்டும். வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குரும்பா கவுண்டர் இன மக்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி., சீட் வாய்ப்பளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் சுருளிநாதன் நன்றி கூறினார்
............................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 

Comments