Skip to main content

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தேனி, நவ.1-

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 1.11.2025 அன்று நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் தலைமையில் நடைபெற்றது. 

தேனி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகையா, அரண்மனைப்புதூர் ஊராட்சி செயலாளர் ரதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


இதேபோன்று குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
கோவிந்தநகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
சீலையம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் அஜய், வடபுதுபட்டி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் உள்பட ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments