Skip to main content

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி, டிச.5-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (05.012026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 241 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும், 2 பயனாளிகளுக்கு ஊன்று கோல்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பஞ்சாபிகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கதிர்வேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து REC நிறுவனத்தின் நிதி உதவியோடு இந்தியன் ரெட் கிராஸ் மருத்துவர். செவிலியர், மருந்தாளுநர், உதவியாளர் அடங்கிய மருத்துவக்குழு அத்தியாவசிய மருத்துவ பொருட்களுடன், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், மருத்துவ சேவை வழங்கிடும் பொருட்டு நடமாடும் மருத்துவ சேவை வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments