தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
தேனி, நவ.16-
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி வசந்த மஹாலில் 15.11.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் வட்ட துணைத்தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார்.
கூட்டத்தின் போது தேனி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் போது புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக பிரபு, மாவட்ட செயலாளராக ராஜ்குமார், மாவட்ட பொருளாளராக குமரேசன் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜரத்தினம் சான்றிதழையும், மாநில பொதுச்செயலாளர் குமார் பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தார்.
இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
.............................
நாகராஜ், செய்தி ஆசிரியர்





Comments