Skip to main content

தேனி பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ‌.க-வில் இணைந்தனர்

தேனி, ஜூன்.26-

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளராக இருந்து வந்த தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ.க-வில் இணைந்தனர்.


இதற்கான இணைப்பு  26.6.2026 அன்று தமிழக வெற்றிக் கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் அதிமுக பேரூர் நிர்வாகிகள் ரவி ராணி, பாண்டியம்மாள் மாயத்தேவர், சந்திரசேகர், முருகேசன், பவுன்தாய் ஜெயராம், வெற்றிச்செல்வன், சார்பு அணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, முத்துப்பாண்டி, தாணு விக்னேஷ், நவீன்குமார், பாண்டியராஜன், முருகேசன், ரிஷிபாரதி, அகமது ஆரிப், அருண்பண்டியன், ஜெகநாதன், வெள்ளைத்துரை, போஸ் மணிகண்டன் மற்றும் வார்டு செயலாளர்கள் சிவக்குமார், சந்திரா வெற்றிச்செல்வன், ஆசைத்தம்பி, வெங்கடேஷ், முத்தையன், முத்துக்குமரன், அறிவானந்தம், ராஜ பார்த்திபன், முருகேசன், வீரமணி, மணிகண்டன், தேவதாஸ், ரமேஷ், நாகேஸ்வரன், செல்வராஜ் ஆகியோர் த.வெ.க-வில் இணைந்தனர்.
இந்த இணைப்பு நிகழ்வின் போது தேனி த.வெ.க வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கட்சியில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்று தீபன் சக்கரவர்த்தி உள்பட அனைவருக்கும் த.வெ.க கட்சி துண்டு அணிவித்தார். 
இதனைத்தொடர்ந்து கட்சியில் இணைந்த அனைவரும் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Advertisement 

Comments