Skip to main content

தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளர் போடி ஏ.பி.பி ராஜா அழகணன் த.வெ.க-வில் இணைந்தார்

தேனி, ஜூன்.23-

தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளராக இருந்த போடி பகுதியை சேர்ந்த ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதற்கான இணைப்பினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களின் முன்னிலையில் ஏ.பி.பி. ராஜா அழகணன் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார்.

த.வெ.க-வில் இணைந்துள்ள ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதல்வர், முன்னாள் நிதியமைச்சர், தமிழக சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர், தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோருக்கு அரசு நேர்முக உதவியாளராகவும், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் உதவி மேலாளராகவும் பணியாற்றி  கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
...........................
நாகராஜ், தலைமை நிருபர் 
செல் - 9842145271

Comments

Anonymous said…
Congratulations 🎉