தேனி மற்றும் வடபுதுபட்டியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா : கேக் வெட்டி, சேலை, அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
தேனி, ஜூன்.23-
தமிழக வெற்றிக் கழகம் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா 22.6.2026 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் தேனி நகரில் தெய்வா பால்பாண்டி ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள தெய்வா ஹோட்டல் முன்பு அசைவ பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க-வை சேர்ந்த தக்காளி சந்திரன், ஜெயமணி, ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தேனி அருகே உள்ள வடபுதுபட்டியில் விஜய் சசிகுமார் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி த.வெ.க வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க வடபுதுபட்டி கிளை செயலாளர் ஞானராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல வடபுதுப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அஜிதா தெய்வேந்திரன் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தோழர்கள் முரளி, சாந்தி, விஸ்வநாதன், செல்லக்கண்ணு, கௌசல்யா, வள்ளி, மீனா, ஜெயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
...............................
நாகராஜ், தலைமை நிருபர்









Comments