Skip to main content

தேனி பென்னிகுயிக் லயன்ஸ் கிளப் தொடக்க விழா: தலைவர் வி.ஆர்.ராஜன் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தேனி, அக்.16-

தேனி மாவட்டத்தில், தேனி பென்னிகுயிக் லயன்ஸ் கிளப் தொடக்க விழா நிகழ்வு தேனி அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள வெள்ளான் செட்டியார் திருமண மண்டபத்தில் 16.10.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு லயன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். GAT ஏரியா லீடர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்
விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 
விழாவின் போது தேனி பென்னிகுயிக் லயன்ஸ் கிளப் தலைவராக டாக்டர் வி.ஆர். ராஜன் தலைமையில் செயலாளர் அருள் கண்ணன், பொருளாளர் மனோகரன், முதல் துணைத்தலைவர் ஏ.பி.பி. ராஜா அழகணன், இயக்குனராக பெரியகுளம் நேசம் முருகன் மற்றும் நிர்வாகிகள், இயக்குனர்கள் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு GMT மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் பதவியேற்று வைத்தார். 
விழாவில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், மக்கள் வழக்கறிஞர் எம்.கே.எம் முத்துராமலிங்கம், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜமோகன், இ.எஸ். சீனிவாசன், கணேஷ், சரவணராஜா, கண்ணன், பாலமுருகன், பாலபிரகாஷ் உள்பட பல்வேறு லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் போது பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேல் நிதிஉதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் தேனி பென்னிகுயிக் லயன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்டது.
...............................
K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments