Skip to main content

தேனி மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவேன்: புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட வ.சிவகிருஷ்ணமூர்த்தி தகவல்


தேனி, அக்.10-
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10.10.2026 அன்று தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக  வ. சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, தற்பொழுது சென்னையில் வசித்துவரும் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, (B.Tech) பட்டம் பயின்று, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் (UPSC) தேர்ச்சி பெற்று. விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி)-ஆகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவி சார் ஆட்சியராகவும், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக வ.சிவகிருஷ்ணமூர்த்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக பணி வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொண்டு, சிறப்புமிக்க தேனி மாவட்டத்தில் பணியாற்றுவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.

இந்த மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் போதுமான அளவு கிடைத்திடும் வகையில் பணியாற்றுவேன். மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி உரிய தீர்வு வழங்கிட பணி மேற்கொள்வேன் என்று மாவட்ட கலெக்டர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
...........................
K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments