தேனியில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வழங்கினார்.
தேனி, அக்.18-
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் 18.10.2026 அன்று நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மாவட்ட கலெக்டர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சிறப்பு திட்டமாக தேனி மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ ரூபாய் 30-க்கு சன்னரக அரிசி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துவக்கி வைத்து பேசுகையில்,
தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டியில் தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். அந்த காலக்கட்டங்களில் தேனி மாவட்டம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் எந்தவொரு பெரிய அளவிலான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. ஆனால், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போதுமான அளவில் உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், விவசாயம், விளையாட்டு, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், குறிப்பாக பேருந்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு தேவையான பேருந்து வசதிகள், சாலை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். தேனி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணையை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்றுவதற்கும், தூர்வாருவதற்கும் உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம். எரசக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1,23,70,000/- மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.98,96,000/- மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் மந்திச்சுனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.59,3,000/- மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.2,81,97,000/- மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளி கட்டிடங்களை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
அதனை அடுத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 1440 மகளி உதவிக்குழு பயனாளிகளுக்கு ரூ.20,00,00,000/- வங்கி கடனுதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2,65,000/- மானியத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், வன உரிமை பட்டா வைத்திருப்பவர்களுக்கான பரப்பு விரிவாக்கம், பிரதான் மந்திரி ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிரந்தர காய்கறி கல்தூண் பந்தல் அமைத்தல், தக்காளி தர மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டம் அமைப்பதற்கான ஆணைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 90 பயனாளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.35,00,000/- மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அட்டைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.34,500/- மானியத்தில் மக்காச்சோள விதைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.4,00,000/-நலிந்தோருக்கான குடும்ப உதவித்தொகைகளையும், 3 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும், 303 பயனாளிகளுக்கு ரூ.5,10,23,935/- மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், இயற்கை பேரிடர் காரணமாக சேதமடைந்த வீடுகளின் 3 பயனாளிகளுக்கு ரூ.12,000/- நிவாரண தொகைகளையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மத்திய மாநில மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.5,40,000/- மானியத்தில் கொல்லைப்புற அலங்கார வண்ண மீன் வளர்ப்பு. 3 பயனாளிகளுக்கு ரூ.90,000/- மானியத்தில் ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், சமூக நீதித்துறை தாட்கோ-தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலம் 1 பயனாளிக்கு விபத்துக்காப்பீடு மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.13,380/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17,562/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், பால்வளத்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.33,42,000/- மதிப்பீட்டில் சிறு பண்ணை அமைத்தல், கறவை மாட்டு கடன் மற்றும் கறவை மாடு பராமரிப்பு கடனுதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 28 மகளிர் சுய உதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ.39,00,000/-வங்கி கடனுதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.4,41243/- மானியத்தில் டிராக்டர் வண்டியினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கருணை அடிப்படையிலான அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினையும் என மொத்தம் 1,960 பயனாளிகளுக்கு ரூ.26,45,72,620/- மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வழங்கினார்.
முன்னதாக, வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் தேனி-சின்னமனூர் வழித்தடம், போடிநாயக்கனூர்- உத்தமபாளையம் வழித்தடம் (2), கம்பம்-தேவாரம். கம்பம்- காமயகவுண்டன்பட்டி வழித்தடம், சின்னமனூர்-அண்ணா நகர் வழித்தடம் என மொத்தம் 6 புதிய பேருந்துகளின் சேவைகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்பின்னர், மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் முன்னேற்பாடு ஆயத்த பணிகளுக்கு தேவையான பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
இந்த விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், தமிழக வெற்றிக் கழகம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், சார் ஆட்சியர் (பெரியகுளம்) தவ்லேந்து, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) விவேக்குமார் யாதவ், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீராச்சாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர், பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திண்டுக்கல் மண்டலம்) முத்துக்கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நர்மதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கவிதா மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த மாவட்ட நிலையிலான அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
........................................
K.நாகராஜ், தலைமை நிருபர்










Comments