தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கோடாங்கிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
தேனி, அக்.2-
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 2.10.2026 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், கோடாங்கிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.
கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து, அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும்.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம். தணிக்கை அறிக்கை. தூய்மையான குடிநீர் விநியோகம், பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல்.ஜல் ஜீவன் திட்டம். தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதாயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம். ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், கிராம செழுமை மீட்சித் திட்டத்தின் கீழ் பொதுச் சொத்துக்கள், சேவைகள், வள மேம்பாட்டு திட்டம் மற்றும் சமூக மேம்பாடு திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகள், கரீப் கல்யாண் அன்ன யோஜனா, ஆடு, மாடு வளர்ப்பு தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் விபரங்கள், மருத்துவப்பயிர், மலர் சாகுபடி பட்டுப்பூச்சி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, நாற்றங்கால், விதை உற்பத்தி மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் விபரங்கள். உணவகங்கள் அமைத்தல், எழுதுபொருட்கள் அங்காடி அமைத்தல், எளிய ரசாயண வீட்டு உபயோக பொருட்கள் தொகுப்பு, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி தின்பண்டங்கள் தயாரித்தல் தொழில் தொகுப்புகள், மண்பாண்டம் தொழில் தொகுப்புகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதிக்கப்பட்டது.
மேலும், காய்ச்சல், தலைவலி, சளி இருமல், தொண்டைவலி, உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் தாமாகவே மருந்துகளை உட்கொள்ளாமல் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
அதுபோல, டெங்கு காய்ச்சல், பொதுமக்கள் சேமித்து வைக்கும் தண்ணீரிலும், மழைக்காலங்களில் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள அனைத்துப் பொருட்களில் கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே, பொதுமக்கள் வீட்டில் சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்கவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்டத்துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் இரா.வைத்திநாதன் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீராச்சாமி துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடேஸ்வரன், மாவட்ட சமூகநல அலுவலர் விஷ்ணுபிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாராமன். சுபாஷ் சந்திரபோஸ், ஊராட்சி செயலாளர் திருப்பதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொறியாளர் அஜய் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிராம பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ரதவேல் தலைமையில் நடைபெற்றது.
இதேபோன்று கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சங்ககோணாம்பட்டியில் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.........................
K.நாகராஜ், தலைமை நிருபர்






Comments