Skip to main content

போடி, சின்னமனூர் பகுதியில் உள்ள இரவுநேர உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு


தேனி, ஆக.5-

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையோர உணவகங்கள் மற்றும் இரவுநேர உணவகங்கள் பெருகி வருவதாகவும், இவற்றில் சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் உணவகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன், உத்தரவின்பேரில் போடிநாயக்கனூர், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இரவு நேர உணவகங்களில் 3.8.2026 அன்று உணவு பாதுகாப்பு அலுவலர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், சாலையோர மற்றும் இரவுநேர உணவகங்கள் என மொத்தம் 33 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் கெட்டுப்போன நிலையிலிருந்த இறைச்சி மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. 

மேலும், உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 55-ன் கீழ் 4 மேம்படுத்துதல் அறிவிப்பாணை வழங்கப்பட்டு அபாரதம் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல உணவு எண்ணெய்யை ஒருமுறை மட்டும் பயன்படுத்திட வேண்டும் எனவும், மீதான எண்ணெய்யை அரசால் அங்கீகரிக்கப்பட்ட RUCO நிறுவனத்திற்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

சாலையோர மற்றும் இரவுநேர உணவகங்கள் நடத்தும் வணிகர்களுக்கு பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கிடும் பொருட்டு 29.7.2026 அன்று உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மற்றும் முகாம் நடத்தப்பட்டது.

அதுபோல தேனி மாவட்டம் முழுவதும் செயல்படும் சாலையோர மற்றும் இரவு நேர உணவகங்கள் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என உணவு பாதுகாப்பு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.................................

நாகராஜ், தலைமை நிருபர் 

Comments