Skip to main content

தேனி மாவட்டத்தில், ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: அம்பாசமுத்திரம் ஊராட்சி கூட்டத்தில் கலெக்டர் இரா.வைத்திநாதன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்

தேனி, ஆக.15

இந்திய நாட்டின் 80-ஆவது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 15.8.2026 அன்று நடைபெற்றது. 

இதில் தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் பேசுகையில், ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து, அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும்.

தமிழ்நாட்டில் வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கிராமப்புற மக்களின் நலனுக்காக நடத்தப்படும் இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம். தொழிலாளர் வரவு, செலவு திட்டம், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார தலைப்புகளிலும் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர விவாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து 80-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு புத்தாடைகள் வழங்கி பொது விருந்தில் பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்நிகழ்வுகளில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி) துஷார் ஸ்ரீ ஹர் ஷிண்டே, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) பாலசரஸ்வதி துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடேசன், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, தேனி தாசில்தார் ரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சரவணன், கோவில் செயல் அலுவலர் சபிதா, ஊராட்சி செயலாளர்  தமிழ்செல்வி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொறியாளர் அஜய் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிராம பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

அதுபோல தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இதேபோன்று கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிவலிங்கநாயக்கன்பட்டியில் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. 

அதுபோல தாடிச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ரகுநாத் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

.........................

நாகராஜ், தலைமை நிருபர்

Comments