Skip to main content

போடி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஏப்.5-

தேனி திமுக வடக்கு மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் போடி மனோ தேவ் மஹாலில் 5.4.2026 அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தேனி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், போடி திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், போடி நகர திமுக செயலாளர் புருஷோத்தமன், தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி உள்பட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 
.............................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments