Skip to main content

வீரபாண்டி திருவிழாவில் இருந்து வீடு திரும்பிய குடும்பத்தை வழிமறித்து தங்க தாலியை பறிக்க முயற்சி : மர்ம நபர்கள் கைவரிசையால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை தடுக்க வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனி, மே.14-

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், தேனி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத்தலைவர் சிவா, நகர செயலாளர் அழகு பாண்டி ஆகியோர் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஜெ. மகேஷ் அவர்களிடம் நேரில் புகார் ஒன்று மனு அளித்துள்ளனர். 

அந்த மனுவில் தேனி மாவட்டம், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி தேனி நகர துணை செயலாளர் ரெங்கராஜ் ஆகிய நானும், எனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து விட்டு பெரியகுளம் செல்லும் புதிய பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தோம்.

அப்போது போடி விலக்கு ரவுண்டானாவை தாண்டி ஆதிபட்டி பாலம் அருகே வந்த போது, ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து திடீரென இவர்களின் வண்டியை வழிமறித்து கீழே தள்ளி விட்டனர்.

அதில் வண்டியில் மூன்றாவதாக இருந்த மர்ம நபர், தனது கையில் வைத்திருந்த குறடினால் ரெங்கராஜன் அவர்களின் மனைவி நாகராணி அவர்களின் கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தங்க தாலிக்கொடியை அறுக்க முயன்றுள்ளார். அந்த குறடு கழுத்தில் பட்டதால் கடும் வலியால் துடித்த நாகராணி சத்தமிட்டுள்ளார். உடனே அச்சமடைந்த அந்த 3 மர்ம நபர்களும் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் செல்லும் பாதை வழியாக தப்பி ஓடி மறைந்து விட்டனர்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ரெங்கராஜன் குடும்பத்தினர் போடி விலக்கு ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் நடந்த விபரங்களை தெரிவித்து விட்டு பின்னர் வீடு திரும்பினோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இச்சம்பவம் குறித்த மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

வீரபாண்டி திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு நேரங்களில் குடும்பத்துடன் பயணம் செய்கிற சூழ்நிலையில், பைபாஸ் சாலைகள் மற்றும் பாலம் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் டோல்கேட் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இரவு நேரங்களில் போதுமான மின் விளக்கு வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது.

பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசு மற்றும் காவல்துறையின் முதன்மை கடமையாகும். இத்தகைய குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
................................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments