Skip to main content

தேனியில், ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

தேனி, அக்.30- 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 29.10.2025 அன்று நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சுந்தரபாண்டி முன்னிலை வகித்தார்.  
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சுருளி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரதவேல், பாண்டி, முத்துக்குமார், கணபதி உள்பட ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தினை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும். 

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் வட்டார/மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணி காலத்தை கருத்தில் கொண்டு வட்டார/மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 
ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை/சிறப்பு நிலை/தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் 
........................
நாகராஜ், தலைமை நிருபர் 

Comments