தேனி, நவ.19-
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 18.11.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 19.11.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா, மாவட்ட பொருளாளர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற வேண்டும். புறஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும்.
காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர, சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
........................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments