தேனி, ஜன.25-
தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான ஹேக்கத்தான் தொழில்நுட்ப தொடர் போட்டி 23.01.2026 மற்றும் 24.01.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. . இந்த போட்டிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் தர்மராஜன். உபதலைவர் ஜீவகன். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டியில் சாப்ட்வேர் பிரிவில் படைப்பில் 68 அணிகளும் ஹார்டுவேர் பிரிவு படைப்புகளில் 55 அணிகளும் சேர்ந்து 123 அணிகளாக 730 மாணவ, மாணவிகள் பங்கு பெற்று தங்களுடைய பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள்.
இப்போட்டியில் மாணவ, மாணவிகளின் பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளை போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி, கணினிபொறி மற்றும் அறிவியல் துறையின் பேராசிரியர் முனைவர்.ராணி, திருச்சி எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் பேராசிரியர் முனைவர் உமர், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறையின் பேராசிரியர் சந்திரா, ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்
அதுபோல பெங்களூர் குளோபல் டேலன்ட் அக்ரோலேப், சீனியர் ப்ராஸஸ் மேலாளர் தன விக்னேஷ், தேனி மேகம் இன்போ டெக் ப்ரைவேட் லிமிடெட் தலைமை செயல் அலுவலர்ழு அருண்ராஜா நாராயணன். தேனி டி.எம் இனோவேசன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆனந்த்ராஜ், சென்னை ராயல் என்பீல்டு ஜீனியர் உற்பத்தி மேலாளர் தரணிதரன், தேனி ஸ்ரீ போத்தீஸ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
இந்த போட்டியில் சிறந்த முதல் 50 பொறியியல் கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகள் இறுதி போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளன. ஹேக்கத்தான் டெக் தொடர் தொழில்நுட்ப போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சத்யா, ஒருங்கிணைப்பாளர், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையின் தலைவர் முனைவர் வெனீஸ்குமார், செயற்கை நுண்ணறிவு அண்டு தரவு அறிவியல் துறையின் தலைவர் விக்னேஷ், கட்டிடவியல் துறையின் தலைவர் நாகரத்தினம், பேராசிரியர் முனைவர்.அனந்த கிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் அருள்ஜோதி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்

Comments