தேனியில் தமிழ் இலக்கியக் கழகம் தொடக்கம் நிகழ்ச்சி தேனி காமராஜர் பூங்கா அருகே உள்ள திண்ணை பயிற்சி மையத்தில் 26.9.2026 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வி. பழனிச்சாமி தலைமை தாங்கினார். புலவர் சேவியர் பீட்டர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் திண்ணை பயிற்சி மைய நிர்வாகி செந்தில், எழுத்தாளர் சுப்பிரமணி, ஆண்டிபட்டி ஞானபாரதி, சின்னமனூர் வட்டார தொழில் முனைவோர் சங்க உதயகுமார், தொழிலதிபர்கள் ஜாய், நிக்சன், அய்யன் குமார், தமிழாசிரியர் போடி பழனிச்சாமி உள்பட தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது தமிழ் மொழி, தமிழ் சமுதாயம் சேவை செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த தமிழ் இலக்கியக் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
................................
K.நாகராஜ், தலைமை நிருபர்



Comments