Skip to main content

தேனி யூனியன், நாகலாபுரம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டும் இடங்களில் சாலையோர மரக்கன்றுகள் அமைக்கும் பணி


தேனி, செப்.25-
தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில் நாகலாபுரம் மற்றும் கோபாலபுரம் கிராமங்களில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடங்களில் தேனி மாவட்ட கலெக்டர் இரா.வைத்திநாதன் அவர்களின் உத்திரவின்படி குப்பைகள் அகற்றப்பட்டு , சாலையோர பூங்கா அமைக்கும் பணியினை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

இதற்காக மரக்கன்றுகள் அமைக்கும் பணி தேனி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்/தணிக்கை) வெங்கடேஷ்வரன் தலைமையில் தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மைதிலி ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டு சாலையோர பூங்கா அமைக்கும் பணியினை  துவக்கி வைத்தனர்.  

அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஊராட்சி செயலர் சுருளி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
..............................
K.நாகராஜ், தலைமை நிருபர் 

Comments