தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) மற்றும் பென்னிகுயிக் அரிமா சங்கம் சார்பில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள கம்பம் எம்.எல்.ஏ.-விடம் கோரிக்கை மனு
தேனி, செப்.23-
தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் பென்னிகுயிக் அரிமா சங்கம் சார்பில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களை கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு எம்.எல்.ஏ.-விடம் கோரிக்கை வைத்தனர்.
இதேபோன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் அவர்களை சந்தித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன், சுகாதாரம் மற்றும் சமூக பொறுப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திட தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்புகளில் தமிழ்நாடு தொண்டு கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், தேனி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் நேசம் முருகன் மற்றும் அதிதி பவுண்டேஷன் நிறுவன தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
............................
K.நாகராஜ், தலைமை நிருபர்
சுக்ரன் நியூஸ் செப்டம்பர் 2026 இதழ் :



Comments